Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
உணர்வுகளில் உராய்வை உருவாக்கும்போது, வெறுப்பாக மாறுவீர்கள். உங்கள் உணர்வுகளில் அருளை உருவாக்கினால், அன்பாக மாறுவீர்கள்.
எண்ணங்களும், உணர்வுகளும் நம் விழிப்புணர்வில் வந்துவிட்டால், வாழ்க்கையை மகத்தான விதத்தில் நாம் உருவாக்க முடியும்.
யாருக்கும் எதற்கும் நீங்கள் இதை செய்தாக வேண்டும் என்கிற கடமை எதுவும் இல்லை. உங்களுக்குள் அன்பும் அக்கறையும் இருந்தால், எது தேவையோ அதை நீங்கள் செய்வீர்கள்.
நாம் விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் அதே விஷயத்தை விழிப்புணர்வுடனும் செய்யமுடியும். இதுதான் அறியாமைக்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம்.
பகுத்தறியும் புத்தியின் மூலம், பிழைப்பு நடத்துவது எப்படி என கற்றுக்கொள்ள முடியும். பக்தியின் மூலம், நீங்கள் ஒரு உயிராக மலர்வது எப்படி என உணர முடியும்.
மகிழ்ச்சியும் துன்பமும் உற்பத்தி ஆவது உங்கள் மனத்தில்தான்.
தியானம் என்பது செய்யப்படும் செயல் அல்ல - அது நறுமணம் வீசும் ஒரு பூ மலர்வதை போன்றது.
யோகா என்றால் தனிமனிதராக இருக்கும் உங்கள் எல்லைகளை கரைத்து பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர்வது என்று அர்த்தம்.